Translate

Thursday, 13 February 2014

இரத்த மூலம், பெரும்பாடு , சீத பேதி குணமாக்கும் மாம்பருப்பு மருத்துவம் - Bleeding Piles, Dysentery

இரத்த மூலம்பெரும்பாடு , சீதபேதி குணமாக்கும் மாம்பருப்பு மருத்துவம் 


உணவே மருந்து,மருந்தே உணவு என்னும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது நமது தமிழ் மருத்துவம். அவ்வகையில் நாம் உண்ணும் உணவுப் பொருள்களில் நோய்களைப் போக்கும் அரிய குணங்கள் அடங்கியுள்ளன.

உண்ணத் தெரிந்தவனுக்கு  நோயில்லை என்பது சித்தர் வாக்காகும்.நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் தன்மைகளை அறிந்து உண்டால் நோய்களே வராமல் ஆரோக்கியமாக வாழலாம்.இதற்கான சூத்திரங்களை சித்தர்கள் அற்புதமாக வடிவமைத்துள்ளனர்.இதனை மக்கள் எளிமையாய் புரிந்துகொண்டு பயன் பெரும் வகையில் சித்தர் பிரபஞ்சம் இணையதளம் அரிய விளக்கங்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது.

முக்கனிகள் எனப்போற்றப்படும் மா,பலா,வாழை இதில் முதல் இடத்தில் உள்ளது மா எனப்படும் மாம்பழம் ஆகும்.அனைத்து பழங்களின் சுவைகளி லும் விஞ்சி நிற்பது இதுவே ஆகும். இது சுவைகளில் மட்டுமல்ல வேதனை தரும் நோய்களை போக்கும் அரிய குணமும் இதற்குண்டு.

வெயில் காலங்களில் வரும் மாம்பழ சீசனில் மாம்பழத்தை உண்டுவிட்டு கொட்டையை தூர எரிந்து விடுவோம்.ஆனால் அந்த கொட்டயில் உள்ள பருப்பில் அற்புதமான  மருத்துவ குணம் அடங்கி உள்ளது.


பெரும்பாடு , அதிக உதிரப்போக்கு குணமாக ;
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள்  செய்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து ஒரு வாரம் தினசரி உண்டால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் தோன்றக்க்கூடிய அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி குணமாகும் .  


சீதபேதி,வயிற்றோட்டம் குணமாக  - Dysentery, Diarrhea  
மாம்பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இந்த நான்கும் 2-கிராம் அளவு எடுத்து எலுமிச்சை பழச்சாறு விட்டு அரைத்து ஒரு தம்ளர் அளவு மோரில் கலந்து உண்ண இரண்டு வேளையில் சீதபேதி, வயிற்றோட்டம் குணமாகும்.


இரத்த மூலம் குணமாக - Bleeding Piles
மாங்கொட்டயின் உட்பருப்பை எடுத்து உலர்த்தி இடித்து தூள்  செய்து அரை டீஸ்பூன் அளவு எடுத்து 50 -மிலி தயிரில் கலந்து உண்ணவும்.இது போல் காலை,மாலை இரண்டு வேளை உண்ண  மூன்று அல்லது ஐந்து நாட்களில் இரத்த மூலம் குணமாகும்.


நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி -5 - T.N
cell : 9865430235 - 9095590855
Monday, 3 February 2014

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date

குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date  குழந்தை பிறக்கும் நாள் கணிக்கும் முறை - Natural Child Birth Date  
                                                                        
பொதுவாக பெண்களுக்கு கர்ப்பம் தரித்தவுடன் குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இதற்காக மருத்துவர்களை நாடும் போது அவர்கள் பொதுவாக கர்ப்ப கால கணக்கில் குறிப்பிட்டுள்ள முறைப்படி குழந்தை பிறக்கும் நாளை கணித்துக் கூறுவார்கள்.

இன்றைய காலத்தில் இந்த கர்ப்பகால கணக்கும் அதில் உள்ள சூட்சுமம்   அனைவரும் அறியாததால் இயற்கையான பிரசவம் என்ற நிலை மாறி சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறக்கும் நிலையும் அதன் சதவிகிதமும் அதிகரித்து வருகின்றது. 

கருத்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி முதிர்வடைந்தவுடன் இயற்கையாக பிறக்க வேண்டும் என்பதுதான் மனித உடலின் அமைப்பாகும். ஆனால் இன்றைய அறிவியல் உலகின் மருத்துவ முறையின் மருத்துவர்கள் சிலரால் அறுவை சிகிச்சை என்னும் நிலைக்கு ஆளாகின்றனர்.

கர்ப்பகால கணக்கில்  கூறப்படும் 40 -வாரம் [ 280 -நாட்கள் ] என்பது பொதுவானதாகும்.இதில் ஆண் குழந்தையாக இருந்தால் முன்பே பிறந்து விடும்.பெண் குழந்தையாக இருந்தால் இந்த கணக்கில் கூறப்படும் நாட்களுக்குப் பின்புதான் பிறக்கும்.ஆனால் மருத்துவர்கள் நாட்களை முன், பின்னாக கணித்து சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சை வரை கொண்டு செல்கின்றனர்.எனவே மேலே இதனை கணிக்கும் முறையை தனியே பதிவு செய்துள்ள விபரங்களை கவனமாக படித்து கர்ப்பகால கணக்கை கணித்து அந்த நாள் வரை காத்திருங்கள்.

நாட்கள் தாமதம் ஆனாலும் பயம்,கவலை அடைய வேண்டாம்.
இயற்கையான பிரசவ வலி வந்து சுகப்பிரசவம் [Normal Delivery ]  ஆகும்.  

நன்றி !
இமயகிரி சித்தர்...
சித்தர் வேதா குருகுலம் - திருச்சி - 5  T.N
cell : 9865430235 - 8695455549